بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا۟ ٱلْعِدَّةَ وَٱتَّقُوا۟ ٱللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍ مُّبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ لَا تَدْرِى لَعَلَّ ٱللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களை அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு (-உடலுறவு கொள்ளாத சுத்தமான காலத்தில்) விவாகரத்து செய்யுங்கள். இன்னும் இத்தாவை (விவாகரத்து செய்யப்பட்ட சுத்த காலத்திற்குப் பின்னர் மூன்று ஹைழ்கள் - சுத்தமில்லாத காலங்கள் - வரும்வரை) சரியாகக் கணக்கிடுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். (விவாகரத்து செய்த பின்னர்) அவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேற வேண்டாம், தெளிவான தீயசெயலை அவர்கள் செய்தாலே தவிர. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவாரோ திட்டமாக அவர் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டார். இதற்குப் பின்னர் அல்லாஹ் ஒரு காரியத்தை ஏற்படுத்தலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (விவாகரத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையில் மீண்டும் அன்பு ஏற்படலாம். இருவரும் மீண்டும் இணைய விரும்பலாம். ஆகவே, ஒரு முறை மட்டும் தலாக் கொடுங்கள்! அப்போது இத்தா முடிந்து விட்டாலும் புதிய திருமணம் மூலம் இருவரும் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.)
Tamil Translation - Omar Sharifவானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீர் கூறுவீராக:) “நீங்கள் உங்கள் மனைவிகளை ‘தலாக்கு' (விவாகப்பிரிவினை) செய்ய விரும்பினால், அவர்களுடைய (சுத்த காலமான) ‘இத்தா'வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்கள்) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதான் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறுகிறார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக்கிடையில் (சமாதானத்திற்குரிய) ஒரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.