caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 70

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:70

وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَذَكِّرْ بِهِۦٓ أَن تُبْسَلَ نَفْسٌۢ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِىٌّ وَلَا شَفِيعٌ وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَآ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ أُبْسِلُوا۟ بِمَا كَسَبُوا۟ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உலக வாழ்க்கை அவர்களை மயக்கி, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டவர்களை (விட்டு) விடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானவர்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் வேதனையும் இவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) எவர்கள் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ; இன்னும், உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டதோ அவர்களை நீர் விட்டுவிடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ, அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது (தண்டனையிலிருந்து தப்பிக்க) எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் எத்தகையோர் என்றால் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் தண்டனையும் இவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi70. (நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுவீராக. எனினும், ஒவ்வோர் ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீர் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக. (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்கமாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70