قُلْ أَنَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِى ٱسْتَهْوَتْهُ ٱلشَّيَٰطِينُ فِى ٱلْأَرْضِ حَيْرَانَ لَهُۥٓ أَصْحَٰبٌ يَدْعُونَهُۥٓ إِلَى ٱلْهُدَى ٱئْتِنَا قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வைத் தவிர நமக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் அழைப்போமா? நேர்வழியின் பக்கம் எங்களிடம் வா என்று அவனை அழைக்கின்ற நண்பர்கள் அவனுக்கு இருக்க ஷைத்தான்கள் அவனை வழிதவறச் செய்து திகைத்தவனாக பூமியில் இருப்பவனைப் போல், அல்லாஹ் எங்களை நேர்வழிப்படுத்திய பின்னர் எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திருப்பப்படுவோமா?” கூறுவீராக: "நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி அதுதான் நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிட கட்டளையிடப்பட்டோம்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர எங்களுக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் நாங்கள் அழைப்போமா? ஒருவர், அவரை நேர்வழி பக்கம் அழைக்கின்ற நண்பர்கள் அவருக்கு இருந்த நிலையில், ஷைத்தான்கள் அவரை வழிதவறச் செய்து, அவரோ திகைத்தவராக பூமியில் அலைகிறாரே அவரைப் போல், நாங்கள் - எங்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் - எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திரும்பி (குழப்பத்தில் ஆகி) விடுவோமா?’’ (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி, அதுதான் (உண்மையான) நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிடவேண்டும் என்று கட்டளையிடப்பட்டோம்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi71. (நபியே!) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்,) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் ‘தம்மிடம் வா' என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்.'' (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.''