إِنَّآ أَنزَلْنَا ٱلتَّوْرَىٰةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسْلَمُوا۟ لِلَّذِينَ هَادُوا۟ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ بِمَا ٱسْتُحْفِظُوا۟ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُوا۟ عَلَيْهِ شُهَدَآءَ فَلَا تَخْشَوُا۟ ٱلنَّاسَ وَٱخْشَوْنِ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَٰتِى ثَمَنًا قَلِيلًا وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰفِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் 'தவ்றாத்'தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி கோரப்பட்டவர்களாகவும், அதன் மீது சாட்சியாளர்களாகவும் அவர்கள் இருந்த காரணத்தால் (அவர்களும் அதைக் கொண்டே தீர்ப்பளிப்பார்கள்). (பண்டிதர்களே!) மக்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கு அஞ்சுங்கள். என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பவர்கள்!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்விற்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதன் மூலமாக யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். இன்னும், குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி பணிக்கப்பட்டவர்களாகவும், அதற்கு சாட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால் அவர்களும் அதன் மூலமே தீர்ப்பளிப்பார்கள். ஆக, (பண்டிதர்களே!) மக்களை அஞ்சாதீர்கள்; என்னை அஞ்சுங்கள். இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதன் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. ‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!