caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 45

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:45

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌ لَّهُۥ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது அதில் விதித்தோம்: "நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்” எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (பாவங்களின்) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் மீது அ(ந்த தவ்ராத்)தில் சட்டமாக விதித்தோம்: “நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் (ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்திய) காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்” ஆக, எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (அவரின் பாவங்களுக்கு) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi45. அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கும் (காயமாக) நிச்சயமாக பழி வாங்கப்படும்'' என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) நன்மைக்காக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70