وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوْرَىٰةُ فِيهَا حُكْمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنۢ بَعْدِ ذَٰلِكَ وَمَآ أُو۟لَٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! இவர்கள்) உம்மை எவ்வாறு தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்? அவர்களிடம் தவ்றாத் இருக்கிறது. அதில் அல்லாஹ்வின் சட்டம் இருக்கிறது. பிறகு அதற்கு பின்னர் (புறக்கணித்து) திரும்புகின்றனர். இவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே! அவர்கள்) உம்மை எவ்வாறு நீதிபதியாக - தீர்ப்பளிப்பவராக ஆக்குகிறார்கள்? அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது. அதில், அல்லாஹ்வின் சட்டம் இருக்கிறது. (உம்மிடம் வந்த) பிறகு, அதற்கு பின்னர் (உமது சட்டம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால்) அவர்கள் (உம்மை புறக்கணித்து) திரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi43. (எனினும் நபியே!) இவர்கள் உம்மை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கிறது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கிறது. அவ்வாறிருந்தும் அதை இவர்கள் புறக்கணித்துவிட்டனர். ஆகவே, (அதையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.