يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ شَهَٰدَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ حِينَ ٱلْوَصِيَّةِ ٱثْنَانِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ أَوْ ءَاخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَأَصَٰبَتْكُم مُّصِيبَةُ ٱلْمَوْتِ تَحْبِسُونَهُمَا مِنۢ بَعْدِ ٱلصَّلَوٰةِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرْتَبْتُمْ لَا نَشْتَرِى بِهِۦ ثَمَنًا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ وَلَا نَكْتُمُ شَهَٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلْـَٔاثِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் சமீபித்தால் மரண சாசனம் கூறும் நேரத்தில் உங்களில் நீதமான இருவர் உங்கள் மத்தியில் சாட்சியாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பூமியில் பயணம் செய்து, (அப்பயணத்தில்)உங்களை மரணம் என்ற சோதனை வந்தடைந்தால் (சாட்சிக்காக முஸ்லிமான இருவர் கிடைக்காவிடில் முஸ்லிம்களாகிய) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்க வேண்டும். (சாட்சிகளில், உங்களுக்கு சந்தேகமேற்பட்டால்) அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின்னர் தடுத்து வையுங்கள். அவ்விருவரும், "அ(ந்த சாட்சி கூறிய)தற்குப் பகரமாக ஓர் ஆதாயத்தையும் வாங்கமாட்டோம், அவர் (எங்கள்) உறவினராக இருந்தாலும் சரியே. நாங்கள் அல்லாஹ்விற்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்க மாட்டோம். (அவ்வாறு செய்திருந்தால்) அப்போது நிச்சயமாக நாங்கள் பாவிகளில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது (அவ்விருவரும்) சத்தியம் செய்ய வேண்டும்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் சமீபித்தால் (அவர்) மரண சாசனம் கூறும் நேரத்தில் உங்களில் நீதமான இருவர் உங்கள் மத்தியில் சாட்சியாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பூமியில் பயணம் செய்து, (அப்பயணத்தில்) உங்களை மரணம் என்ற சோதனை வந்தடைந்தால் (சாட்சிக்காக முஸ்லிமான இருவர் கிடைக்காவிட்டால் முஸ்லிம்களாகிய) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்க வேண்டும். (சாட்சிகளில், உங்களுக்கு சந்தேகமேற்பட்டால்) அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின்னர் தடுத்து வையுங்கள். அவ்விருவரும், “அ(ந்த சாட்சி கூறிய)தற்குப் பகரமாக ஒரு தொகையையும் நாங்கள் வாங்கமாட்டோம், அவர் (எங்கள்) உறவினராக இருந்தாலும் சரியே! நாங்கள் அல்லாஹ்விற்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்க மாட்டோம். (அவ்வாறு செய்திருந்தால்) அப்போது நிச்சயமாக நாங்கள் பாவிகளில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது (அவ்விருவரும்) சத்தியம் செய்து கூறவேண்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi106. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.