caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 107

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:107

فَإِنْ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسْتَحَقَّآ إِثْمًا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسْتَحَقَّ عَلَيْهِمُ ٱلْأَوْلَيَٰنِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعْتَدَيْنَآ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்த பிறகு) நிச்சயமாக அவ்விருவரும் (பொய் கூறி) பாவத்திற்குரியவர்களாகி விட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டால் (இந்த பொய் சாட்சியால் எவருக்கு நஷ்டமேற்பட்டு, சத்தியம் செய்யும்) உரிமை ஏற்பட்டவர்களில் (இறந்தவருக்கு) நெருங்கிய வேறு இரு வாரிசுகள் (முன்பு சத்தியம் செய்த) அவ்விருவருடைய இடத்தில் நின்று கொண்டு "அவ்விருவரின் சாட்சியத்தைவிட நிச்சயமாக எங்கள் சாட்சியம்தான் மிக உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு மீறினால்) அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில்தான் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.
Tamil Translation - Omar Sharifஆக, (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்த பிறகு) நிச்சயமாக அவ்விருவரும் (பொய் கூறி) பாவத்திற்குரியவர்களாகி விட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டால் (இந்த பொய் சாட்சியால் எவருக்கு நஷ்டமேற்பட்டு, சத்தியம் செய்யும்) உரிமை பெற்றவர்களில் (இறந்தவருக்கு) நெருங்கிய வேறு இரு வாரிசுகள் (முன்னர் சத்தியம் செய்த) அவ்விருவருடைய இடத்தில் நின்று கொண்டு “அவ்விருவரின் சாட்சியத்தை விட நிச்சயமாக எங்கள் சாட்சியம்தான் மிக உண்மையானது. நாங்கள் எல்லை மீறவில்லை. அவ்வாறு மீறினால் அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi107. (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர், (முன்பு சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று, ‘‘அவர்களுடைய சாட்சியத்தை விட எங்கள் சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்), நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70