caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 171

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:171

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ وَلَا تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ إِنَّمَا ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلْقَىٰهَآ إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِّنْهُ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَا تَقُولُوا۟ ثَلَٰثَةٌ ٱنتَهُوا۟ خَيْرًا لَّكُمْ إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٌ وَٰحِدٌ سُبْحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٌ لَّهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் அளவு கடக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (எதையும்) கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், -அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும்தான் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நன்று. அல்லாஹ் எல்லாம் (வணக்கத்திற்குரிய) ஒரே ஒரு கடவுள்தான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனுக்கே வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Omar Sharifவேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், - அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் மட்டும்தான் (உண்மையில் வணங்கத்தகுதியான) ஒரே ஓர் இறைவன் ஆவான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi171. வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அவனுடைய (‘குன்' என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கிறார். அல்லாஹ் (தன்) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) ‘மூவர்' என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70