يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلْحَقِّ مِن رَّبِّكُمْ فَـَٔامِنُوا۟ خَيْرًا لَّكُمْ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களே! இத்தூதர் உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்தால், வானங்களிலும், பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியனவே! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifமக்களே! இத்தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நல்லதாக அமையும். நீங்கள் (அவரை) நிராகரித்தால், (அல்லாஹ்விற்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனெனில்,) வானங்களிலும் பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi170. மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கைகொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்துவிட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.