لَّن يَسْتَنكِفَ ٱلْمَسِيحُ أَن يَكُونَ عَبْدًا لِّلَّهِ وَلَا ٱلْمَلَٰٓئِكَةُ ٱلْمُقَرَّبُونَ وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادَتِهِۦ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமையாக இருப்பதை விட்டு அறவே திமிரு கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு கொள்வார்களோ இன்னும் பெருமை கொள்வார்களோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்.
Tamil Translation - Omar Sharifஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமைகளாக இருப்பதை விட்டு அறவே திமிரு (கர்வம்) கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு (கர்வம்) கொள்வார்களோ இன்னும் பெருமையடிப்பாரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi172. ஈஸாவும், சிறப்பு வாய்ந்த வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டுவரச் செய்வான்.