caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:15

وَدَخَلَ ٱلْمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَٰذَا مِن شِيعَتِهِۦ وَهَٰذَا مِنْ عَدُوِّهِۦ فَٱسْتَغَٰثَهُ ٱلَّذِى مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِى مِنْ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيْهِ قَالَ هَٰذَا مِنْ عَمَلِ ٱلشَّيْطَٰنِ إِنَّهُۥ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (மூஸா) நகரத்தில் -அதன் வாசிகள் கவனமற்று இருந்த நேரத்தில்- நுழைந்தார். அதில் இருவரைக் கண்டார். அவ்விருவரும் சண்டை செய்தனர். இவர் அவருடைய (-மூஸாவுடைய) பிரிவை சேர்ந்தவர். இன்னும் இவரோ அவருடைய (-மூஸாவுடைய) எதிரிகளில் உள்ளவர். இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக அவரிடம் (மூஸாவிடம்) உதவி கேட்டான். மூஸா அவனை குத்து விட்டார். அவனுடைய கதையை முடித்து விட்டார். (தான் செய்த தவறை உணர்ந்த அவர்) கூறினார்: இது ஷைத்தானின் செயலில் உள்ளது. நிச்சயமாக அவன் தெளிவான வழி கெடுக்கின்ற எதிரி ஆவான்.
Tamil Translation - Omar Sharifநகரவாசிகள் கவனமற்று இருந்த நேரத்தில் - மூஸா அந்த நகரத்தில் நுழைந்தார். ஆக, அவர் அ(ந்த நகரத்தின் ஒரு பகு)தி(யி)ல் இரு ஆடவர்களைக் கண்டார். அவ்விருவரும் சண்டை செய்தனர். இவர் அவருடைய பிரிவை சேர்ந்தவர். இன்னும், இவரோ அவருடைய எதிரிகளில் உள்ளவர். இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக அவரிடம் உதவி கேட்டான். ஆக, மூஸா அவனுக்கு குத்து விட்டார். ஆக, அவனை முடித்து விட்டார். (பிறகு தான் செய்த தவறை உணர்ந்து அவர்) கூறினார்: “இது ஷைத்தானின் செயலில் உள்ளதாகும். நிச்சயமாக அவன் வழி கெடுக்கின்ற தெளிவான எதிரி ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi15. (மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) ‘‘ இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி'' எனக் கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70