caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:14

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥ وَٱسْتَوَىٰٓ ءَاتَيْنَٰهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் தனது வலிமையை அடைந்து (பின்னர் நாற்பது வயதை அடைந்து) அவர் முழுமை பெற்றபோது அவருக்கு (முந்திய நபிமார்களின் மார்க்கத்தைப் பற்றிய) ஞானத்தையும் (விளக்கத்தையும் முந்திய வேதங்கள் பற்றிய) அறிவையும் நாம் தந்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
Tamil Translation - Omar Sharifஅவர் தனது முழு வலிமையை அடைந்து, அவர் (அறிவு) முதிர்ச்சி பெற்றபோது (முந்திய நபிமார்களின் மார்க்கத்தைப் பற்றிய) ஞானத்தையும் (முந்திய வேதங்கள் பற்றிய) கல்வி அறிவையும் நாம் அவருக்கு தந்தோம். இன்னும், இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப்பக்குவம் அடையவே, அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70