قَالَ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَٱغْفِرْ لِى فَغَفَرَ لَهُۥٓ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு அநீதி இழைத்தேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Tamil Translation - Omar Sharif(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு தீங்கு இழைத்துக் கொண்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆக, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. மேலும், ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என் குற்றத்தை மன்னிப்பாயாக!'' என்று அவர் பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை செய்பவன்.