وَإِن كُنتُمْ عَلَىٰ سَفَرٍ وَلَمْ تَجِدُوا۟ كَاتِبًا فَرِهَٰنٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ ٱلَّذِى ٱؤْتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا تَكْتُمُوا۟ ٱلشَّهَٰدَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٌ قَلْبُهُۥ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபயணத்தில் நீங்கள் இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவரை பெறா விட்டால் கைப்பற்றப்பட்ட அடமானங்கள் (அதற்கு பகரமாகும்). உங்களில் சிலர் சிலரை நம்பினால், நம்பப்பட்டவர் தம் நம்பிக்கையை நிறைவேற்றவும்! தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்! சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைப்பாரோ நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவியாகிவிடும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் பயணத்தில் இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவரை நீங்கள் பெறாவிட்டால் (அதற்கு பகரமாக) அடமானங்களை கைப்பற்றி வைக்க வேண்டும். உங்களில் சிலர் சிலரை நம்பினால், நம்பப்பட்டவர், தம்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை சரியாக நிறைவேற்றவும்! இன்னும் தமது இறைவனான அல்லாஹ்வை அவர் அஞ்சவும்! இன்னும், நீங்கள் சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைப்பாரோ நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவியாகிவிடும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi283. மேலும், நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர, (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக் கருதினால் உங்கள்) சாட்சியத்தை நீங்கள் மறைக்கவேண்டாம். எவரேனும் அதை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகிறது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.