caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 284

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:284

لِّلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَإِن تُبْدُوا۟ مَا فِىٓ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ ٱللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்)! உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி கொடுப்பான். அவன் நாடுகிறவரை மன்னிப்பான்; அவன் நாடுகிறவரை வேதனை செய்வான். அல்லாஹ் எல்லாப்பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharifவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவை ஆகும்! இன்னும், நீங்கள் உங்கள் உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி கொடுப்பான். ஆக, அவன் நாடுகிறவரை மன்னிப்பான்; அவன் நாடுகிறவரை தண்டிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi284. (ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70