يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَٱكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِٱلْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔا فَإِن كَانَ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُۥ بِٱلْعَدْلِ وَٱسْتَشْهِدُوا۟ شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَٱمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحْدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحْدَىٰهُمَا ٱلْأُخْرَىٰ وَلَا يَأْبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُوا۟ وَلَا تَسْـَٔمُوٓا۟ أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ ٱللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدْنَىٰٓ أَلَّا تَرْتَابُوٓا۟ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوٓا۟ إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِن تَفْعَلُوا۟ فَإِنَّهُۥ فُسُوقٌۢ بِكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதியாக எழுதவும். எழுதுபவர் அல்லாஹ் அவருக்கு கற்பித்துள்ளதால் எழுத மறுக்க வேண்டாம். ஆகவே, அவர் எழுதவும். கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். கடன் வாங்கியவர், அறிவு முதிர்ச்சியற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதியாக வாசகம் கூறவும். உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதியானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணையைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். (ஆனால்,) நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாயிருந்தால் தவிர, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். எழுத்தாளரோ சாட்சியோ துன்புறுத்தப்பட மாட்டார். நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதவும். எழுதுபவர் - அல்லாஹ் அவருக்கு (எழுத்தறிவை) கற்பித்துள்ளதால் - எழுத மறுக்க வேண்டாம். ஆக, அவர் எழுதவும்; கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். ஆக, கடன் வாங்கியவர், விவரமற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமாக வாசகம் கூறவும். இன்னும், உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். ஆக, இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). இன்னும், சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதமானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாக இருந்தால் தவிர. ஆக, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (கடனுக்கு) வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். இன்னும், எழுத்தாளரையும் சாட்சியையும் துன்புறுத்தக் கூடாது. நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். (மார்க்க சட்டங்களை) அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi282. நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்,) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி, எழுதிக் கொடுக்க மறுக்கவேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் எதையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வராக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமாக வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க்கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவர் ஆண்களாக இல்லையெனில், ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக்கூடிய இரு பெண்களை சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், (பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும் போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். மேலும், (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்)வரை அதை எழு(தாமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியானதாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்ட போதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! மேலும், (தவறாக எழுதுமாறு) எழுத்தாளரையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன் சட்டங்களை) உங்களுக்கு (இப்படியெல்லாம்) கற்றுக் கொடுக்கிறான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.