caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 272

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:272

لَّيْسَ عَلَيْكَ هُدَىٰهُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ ٱللَّهِ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது (பொறுப்பு) அல்ல. என்றாலும் அல்லாஹ், தான் நாடியவரை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் (அது) உங்களுக்கே (நன்மை). அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே! நீர் எவர்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கிறீர்களோ) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது கடமை அல்ல. (உம்மீது நேர்வழியின் பக்கம் அழைப்பதுதான் கடமை.) என்றாலும், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாகும். இன்னும், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். இன்னும், (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi272. (நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துகிறான். (நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதற்கே தவிர, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70