caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 273

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:273

لِلْفُقَرَآءِ ٱلَّذِينَ أُحْصِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِى ٱلْأَرْضِ يَحْسَبُهُمُ ٱلْجَاهِلُ أَغْنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَٰهُمْ لَا يَسْـَٔلُونَ ٱلنَّاسَ إِلْحَافًا وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் பாதையில் தடுக்கப்பட்ட ஏழைகளுக்கு (தர்மம் கொடுப்பது ஏற்றமானது). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க இயல மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்) அவர்களின் அடையாளத்தால் நீர் அவர்களை (தேவையுடையோர் என)ப் புரியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் புரிந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(கல்வி கற்பதற்காக அல்லது ஜிஹாது செய்வதற்காக) அல்லாஹ்வின் பாதையில் முற்றிலும் அடைக்கப்பட்ட ஏழைகளுக்கு (உங்கள் தர்மங்களை கொடுப்பது மிக ஏற்றமானதாகும்). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க சக்திபெற மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (-கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்,) நீர் அவர்களை அவர்களின் (முகம் அல்லது ஆடை, அல்லது இருப்பிடத்தின்) அடையாளத்தால் (அவர்கள் தேவையுடையோர் என) அறியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அ(தையும் அதன் நோக்கத்)தை(யும்) நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi273. (நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப்படாதவர்களாக இருக்கின்றனர். (மேலும், அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70