caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 258

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:258

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِى حَآجَّ إِبْرَٰهِـۧمَ فِى رَبِّهِۦٓ أَنْ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ إِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّىَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحْىِۦ وَأُمِيتُ قَالَ إِبْرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأْتِى بِٱلشَّمْسِ مِنَ ٱلْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ ٱلْمَغْرِبِ فَبُهِتَ ٱلَّذِى كَفَرَ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் இப்ராஹீமிடம் அவருடைய இறைவன் விசயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? "என் இறைவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான்" என்று இப்ராஹீம் கூறியபோது, அவன் "நான் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்" என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: "நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். எனவே அதை மேற்கிலிருந்து நீ கொண்டு வா." ஆகவே நிராகரித்தவன் வாயடைக்கப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இப்ராஹீமிடம் அவருடைய இறைவன் விஷயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் (திமிரில் அவன் இப்படி தர்க்கித்தான்). “என் இறைவன், உயிர்ப்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான்’’ என்று இப்ராஹீம் கூறியபோது, அவனோ “நானும் உயிர்ப்பிப்பேன். இன்னும் மரணிக்கச் செய்வேன்’’ என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். ஆக, நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா.’’ ஆக, (அதற்கு பதில் சொல்ல முடியாமல்) நிராகரித்த(அ)வன் வாயடைத்துப்போனான். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi258. (நபியே!) நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்றாஹீம் ‘‘எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கிறானோ அவன்தான் என் இறைவன்'' என்று கூறியதற்கு, அவன் ‘‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்'' என்று கூறினான். (அதற்கு) இப்றாஹீம் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத்திசையில் உதயமாக்குகிறான். நீ அதை மேற்குத்திசையில் உதயமாக்கு'' எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70