ٱللَّهُ وَلِىُّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَوْلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَٰلِدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நம்பிக்கை யாளர்களின் பொறுப்பாளன். அவர்களை இருள்களிலிருந்து ஒளியை நோக்கி வெளியேற்றுகிறான். நிராகரிப்பவர்கள்,அவர்களின் தோழர்கள் ஷைத்தான்(கள்)தான். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் நம்பிக்கையாளர்களின் உதவியாளன் ஆவான். இருள்களிலிருந்து ஒளியை நோக்கி அவன் அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும், நிராகரிப்பவர்களோ அவர்களின் உதவியாளர்கள் ஷைத்தான்கள் ஆவார்கள். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் (எல்லோரும்) நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi257. அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவை அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின் பால் செலுத்துகின்றன. அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள்.