caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 251

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:251

فَهَزَمُوهُم بِإِذْنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ ٱلْأَرْضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضْلٍ عَلَى ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவர்களைத் தோற்கடித்தார்கள். ஜாலூத்தை தாவூது கொன்றார். அவருக்கு அல்லாஹ் ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். தான் நாடியதிலிருந்து அவருக்கு அவன் கற்பித்தான். மக்களை அவர்களில் சிலரைக் கொண்டு சிலரைவிட்டு அல்லாஹ் (தனது தண்டனையை) தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்துவிடும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது அருளுடையவன்.
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வின் அனுமதியினால் (தாலூத்தின் படையினர்) அவர்களைத் தோற்கடித்தார்கள். தாவூது, ஜாலூத்தை கொன்றார். இன்னும், அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். இன்னும், அவன் தான் நாடியதிலிருந்து அவருக்கு கற்பித்தான். அல்லாஹ் - மக்களை அவர்களில் (உள்ள நல்லோர்) சிலரின் மூலம் (பாவம் செய்த) சிலரை (தண்டனையிலிருந்து) - பாதுகாக்க வில்லையென்றால் இப்பூமி அழிந்திருக்கும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi251. ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70