وَلَمَّا بَرَزُوا۟ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُوا۟ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, "எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு" என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் (-தாலூத்தும் அவரின் படையும்) ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! இன்னும், நிராகரிப்பாளர்களாகிய மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi250. மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள்.