caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:22

وَقَالَ ٱلشَّيْطَٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ إِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகாரியம் (தீர்ப்புக் கூறி) முடிக்கப்பட்டபோது ஷைத்தான் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்கை வாக்களித்தான். நான் உங்களுக்கு வாக்களித்தேன்; உங்களை வஞ்சித்தேன்; உங்கள் மீது எனக்கு அறவே அதிகாரமும் இல்லை. எனினும், உங்களை அழைத்தேன்; எனக்கு பதில் தந்தீர்கள்; ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நிந்தியுங்கள். நான் உங்களுக்கு உதவுபவனாக இல்லை, நீங்களும் எனக்கு உதவுபவர்களாக இல்லை. முன்னரே நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணை ஆக்கியதையும் நிச்சயமாக நான் நிராகரித்தேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.”
Tamil Translation - Omar Sharifமேலும், காரியங்கள் (தீர்ப்புக் கூறி) முடிக்கப்பட்டபோது ஷைத்தான் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்கை வாக்களித்தான். இன்னும், நான் உங்களுக்கு வாக்களித்தேன். ஆனால், நான் உங்களை வஞ்சித்தேன். இன்னும், உங்கள் மீது எனக்கு அறவே அதிகாரம் ஏதும் இருக்கவில்லை. எனினும், உங்களை (பாவத்தின் பக்கம்) அழைத்தேன்; எனக்கு நீங்கள் பதில் தந்தீர்கள்; ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நிந்தித்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உதவுபவனாக இல்லை, நீங்களும் எனக்கு உதவுபவர்களாக இல்லை. முன்னரே நீங்கள் என்னை (அல்லாஹ்விற்கு) இணை ஆக்கியதையும் நிச்சயமாக நான் நிராகரித்தேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.”
Tamil Translation - Abdulhamid Baqawi22. (இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70