وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًا فَقَالَ ٱلضُّعَفَٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَٰكُمْ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மறுமையில்) அல்லாஹ்விற்கு முன் அனைவரும் வெளிப்படுவார்கள். பலவீனர்கள், (பலசாளிகள் என) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் உங்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எதையும் நீங்கள் (இப்போது) எங்களை விட்டு தடுப்பீர்களா?” என்று கூறுவர். (வேதனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (நம் வேதனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன? அல்லது நாம் சகித்தால் என்ன? (எல்லாம்) நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை!” என்று கூறுவர்.
Tamil Translation - Omar Sharifமேலும், (மறுமையில்) அல்லாஹ்விற்கு முன் அனைவரும் வெளிப்படுவார்கள். (தலைவர்கள் என) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எதையும் நீங்கள் (இப்போது) எங்களை விட்டு தடுப்பீர்களா?” என்று (அவர்களை பின்பற்றிய) பலவீனர்கள் கூறுவார்கள். “(தண்டனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (தண்டனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன? அல்லது, நாம் (அதை சகித்துக் கொண்டு) பொறுமையாக இருந்தால் என்ன? எல்லாம் நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை!” என்று (தலைவர்கள்) கூறுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. (மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்.