وَأُدْخِلَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். தங்கள் இறைவனின் அனுமதிப்படி அதில் நிரந்தரமானவர்களாக இருப்பர். அதில் அவர்களின் முகமன் ஸலாம் ஆகும்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் தங்கள் இறைவனின் அனுமதிப்படி அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அதில் அவர்களின் முகமன் ஸலாம் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தங்கள் இறைவனின் கட்டளைப்படி அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களில் (ஒருவர் மற்றொருவரை நோக்கி ‘‘உங்களுக்கு தொடர்ந்து) ஈடேற்றம் (ஸலாம்) உண்டாவதாகுக!'' என்று முகமன் கூறுவார்கள்.