وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِۦ يَٰقَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِى وَتَذْكِيرِى بِـَٔايَٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوٓا۟ أَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ ٱقْضُوٓا۟ إِلَىَّ وَلَا تُنظِرُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதுவீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்குவதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். ஆகவே, உங்கள் காரியத்தை முடிவுசெய்யுங்கள்; உங்கள் இணைதெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்); பிறகு, உங்கள் காரியம் உங்கள் மீது குழப்பமானதாக ஆகிவிடவேண்டாம். பிறகு, என் பக்கம் (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். (இதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதி காண்பிப்பீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்கி இருப்பதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். ஆகவே, உங்கள் (விருப்பப்படி) காரியத்தை முடிவு செய்யுங்கள்; இன்னும், (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்). பிறகு, உங்கள் காரியம் உங்களுக்கு மறைவானதாக குழப்பமானதாக ஆகிவிட வேண்டாம். பிறகு, என் மீது (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். இன்னும், (அதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நூஹ்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi71. (நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதி)னால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின் படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசமளிக்க வேண்டாம்'' என்று கூறினார்.