caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 72

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:72

فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் (புறக்கணித்து) திரும்பினால், (எனக்கு கவலையில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றவர் மீது) இல்லை. முஸ்லிம்களில் நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன் (என்று கூறினார்).
Tamil Translation - Omar Sharif“ஆக, நீங்கள் (புறக்கணித்து) விலகினால், (எனக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. இன்னும், முஸ்லிம்களில் நான் இருக்க வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன்” (என்று நூஹ் கூறினார்).
Tamil Translation - Abdulhamid Baqawi72. பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என் கூலி அல்லாஹ்விடமே தவிர (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்று கூறினார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70