وَمِنْهُمُ ٱلَّذِينَ يُؤْذُونَ ٱلنَّبِىَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٌ قُلْ أُذُنُ خَيْرٍ لَّكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِينَ وَرَحْمَةٌ لِّلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَٱلَّذِينَ يُؤْذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அவர் (அனைத்தையும் செவியேற்கும்) ஒரு காது” என்று கூறி நபியை இகழ்பவர்களும் அவர்களில் உள்ளனர். (நபியே!) கூறுவீராக: “(அவர்) உங்களுக்கு நல்ல காது ஆவார். (அவர்) அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார்; நம்பிக்கையாளர்களை ஏற்றுக் கொள்கிறார். உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு கருணையாவார்.” அல்லாஹ்வின் தூதரை இகழ்பவர்கள் அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “அவர் (அனைத்தையும் செவியேற்கும்) ஒரு காது” என்று கூறி நபியை இகழ்பவர்களும் அவர்களில் உள்ளனர். (நபியே!) கூறுவீராக: “(அவர்) உங்களுக்கு நல்ல(தை செவியுறுகின்ற) காது ஆவார். அவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார். இன்னும், நம்பிக்கையாளர்க(ள் கூறும் செய்திக)ளை ஏற்றுக் கொள்கிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கருணையாக இருக்கிறார்.” இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் தூதரை இகழ்கிறார்களோ, துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi61. (‘‘இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கிறார்'' என்று கூறி (நம்) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘(அவ்வாறு அவர்) நன்மைக்கு செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கிறார்.'' ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.