إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلْفُقَرَآءِ وَٱلْمَسَٰكِينِ وَٱلْعَٰمِلِينَ عَلَيْهَا وَٱلْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِى ٱلرِّقَابِ وَٱلْغَٰرِمِينَ وَفِى سَبِيلِ ٱللَّهِ وَٱبْنِ ٱلسَّبِيلِ فَرِيضَةً مِّنَ ٱللَّهِ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸகாத்துகள் அல்லாஹ்விடமிருந்து (விதிக்கப்பட்ட) கடமையாக வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும், அவர்களின் உள்ளங்கள் (புதிதாக இஸ்லாமுடன்) இணைக்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளுக்கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tamil Translation - Omar Sharif(கடமையான) ஸகாத்துகள் - வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும், அவர்களின் உள்ளங்கள் (புதிதாக இஸ்லாமுடன்) இணைக்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை உரிமையிடுவதற்கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். இது அல்லாஹ்விடமிருந்து (விதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட) கடமையாக இருக்கிறது. இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. (‘ஜகாத்து' மார்க்கவரியாகிய) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கட்டாய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.