caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 62

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:62

يَحْلِفُونَ بِٱللَّهِ لَكُمْ لِيُرْضُوكُمْ وَٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَحَقُّ أَن يُرْضُوهُ إِن كَانُوا۟ مُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களைத் திருப்திபடுத்துவதற்காக அவர்கள் உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திபடுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. (நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70