قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِىٓ أَخْرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزْقِ قُلْ هِىَ لِلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا خَالِصَةً يَوْمَ ٱلْقِيَٰمَةِ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் எவன் தடைசெய்தான்? என்று கூறுவீராக “அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானதே!) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும்) பிரத்தியேகமாக இருக்கும்” என்று கூறுவீராக. அறிகின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் யார் தடைசெய்தார்?” “அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானது) ஆகும். மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும் அது) பிரத்தியேகமாக இருக்கும்” என்று கூறுவீராக. புரிகின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' எனக் கேட்டு, ‘‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்று கூறுவீராக. அறியக்கூடிய மக்களுக்கு (நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.