caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:31

يَٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆதமின் சந்ததிகளே! எல்லா மஸ்ஜிதிலும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அனுமதிக்கப்பட்டதை) புசியுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள் (வரம்பு மீறாதீர்கள்). (ஏனென்றால்,) விரயம் செய்பவர்களை நிச்சயம் அவன் நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஆதமின் சந்ததிகளே! மஸ்ஜிதுகளுக்கு செல்லும்போது உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் (- முழுமையான, சுத்தமான ஆடைகளை அணிந்து தொழுகைக்கு செல்லுங்கள்)! இன்னும், (அனுமதிக்கப்பட்டதை மட்டும்) புசியுங்கள்; பருகுங்கள். ஆனால், விரயம் செய்யாதீர்கள் (அனுமதிக்கப்பட்டதை உண்பதிலும் எல்லை மீறாதீர்கள்)! (ஏனென்றால்,) விரயம் செய்பவர்களை நிச்சயம் அவன் நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70