قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّىَ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَٱلْإِثْمَ وَٱلْبَغْىَ بِغَيْرِ ٱلْحَقِّ وَأَن تُشْرِكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًا وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: நிச்சயமாக என் இறைவன் தடை செய்ததெல்லாம் வெளிப்படையான, மறைவான எல்லா மானக்கேடான காரியங்களையும், பாவத்தையும், நியாயமின்றி (மக்களை) கொடுமைப்படுத்துவதையும், (அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு நீங்கள் இணையாக்குவதையும் மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது கூறுவதையும்தான் (அல்லாஹ் தடைசெய்தான்).
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தடை செய்ததெல்லாம் வெளிப்படையான, மறைவான எல்லா மானக்கேடான காரியங்களையும், பாவத்தையும், நியாயமின்றி (மக்களை) கொடுமைப்படுத்துவதையும், (அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு நீங்கள் இணையாக்குவதையும் மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடைசெய்தான்).”
Tamil Translation - Abdulhamid Baqawi33. (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், அல்லாஹ் எதற்கு ஆதாரம் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடுத்திருக்கிறான்).