caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 91

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:91

وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ إِذْ قَالُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٍ مِّن شَىْءٍ قُلْ مَنْ أَنزَلَ ٱلْكِتَٰبَ ٱلَّذِى جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورًا وَهُدًى لِّلنَّاسِ تَجْعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا وَعُلِّمْتُم مَّا لَمْ تَعْلَمُوٓا۟ أَنتُمْ وَلَآ ءَابَآؤُكُمْ قُلِ ٱللَّهُ ثُمَّ ذَرْهُمْ فِى خَوْضِهِمْ يَلْعَبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"மனிதர்கள் மீது (வேதத்தில்) எதையும் அல்லாஹ் இறக்கவில்லை” என்று அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் அவர்கள் அறியவில்லை. (நபியே!) கூறுவீராக: மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக ஆக்கி அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்தி அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாதவற்றை (நீங்கள்) கற்ப்பிக்கப்பட்டீர்கள். (நபியே!) "அல்லாஹ் (அதை இறக்கினான்)” என்று கூறி, அவர்களை அவர்கள் மூழ்குவதிலேயே விளையாடியவர்களாக விடுவீராக.
Tamil Translation - Omar Sharif“மனிதர்கள் மீது (வேதத்தில்) எதையும் அல்லாஹ் இறக்கவில்லை’’ என்று அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் அவர்கள் அறியவில்லை. (நபியே!) கூறுவீராக: “மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக ஆக்கி, அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்தினீர்கள், இன்னும் அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாதவற்றை (நீங்கள்) கற்பிக்கப்பட்டீர்கள்.” (நபியே!) “அல்லாஹ் (அதை இறக்கினான்)’’ என்று நீர் கூறிவிட்டு, அவர்களை அவர்கள் மூழ்குவதிலேயே (-அவர்களின் பொய்யான கேலி பேச்சுகளில்) விளையாடியவர்களாக நீர் விட்டுவிடுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi91. அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் அருளவே இல்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)'' என்று கூறி அவர்கள் (தங்கள்) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும்படியும் விட்டுவிடுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70