أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ فَبِهُدَىٰهُمُ ٱقْتَدِهْ قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்கள் அல்லாஹ் நேர்வழி செலுத்தியவர்கள். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே, அதையே பின்பற்றுவீராக. "இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமே தவிர இது வேறில்லை” என்று கூறுவீராக.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை நேர்வழி நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே - அதையே நீர் பின்பற்றுவீராக. “இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். இ(ந்த வேதமான)து இல்லை, அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே தவிர’’ என்று கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi90. (நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக.