وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلْنَٰهُ مُبَارَكٌ مُّصَدِّقُ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ يُؤْمِنُونَ بِهِۦ وَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இது நாம் இறக்கிய, அருள் வளமிக்க, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதமாகும். நீர் (இதன் மூலம்) மக்காவையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக (இறக்கினோம்). மறுமையை நம்பிக்கை கொள்பவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் தங்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இது பாக்கியமிக்க (அதிமான நன்மைகளை உடைய) வேதமாகும். நாம் இதை இறக்கினோம். இது, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக் கூடியதாகும். இன்னும், நீர் (இதன் மூலம்) மக்காவையும் (-மக்கா நகரத்தில் உள்ளவர்களையும்) அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக (இறக்கினோம்). இன்னும், எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்வார்களோ அவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், அவர்கள் தங்கள் தொழுகையை மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi92. (நபியே!) இது நாம் உம் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும்.இது தனக்கு முன்னுள்ள (அவர்களுடைய வேதத்)தையும் உண்மைப் படுத்துகிறது. ஆகவே,நீர் (இதைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள்.