caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 127

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:127

وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَٰبِ فِى يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَٰمَىٰ بِٱلْقِسْطِ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர். (நீர்) கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும் வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் (தீர்ப்பளிக்கிறது). “அநாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டுமென்றும்), அநாதைகளுக்கு (மஹர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்துவதையும்” (அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உம்மிடம் பெண்களைப் பற்றி, மார்க்கத் தீர்ப்பு கோருகிறார்கள். (நீர்) கூறுவீராக: “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும், வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் தீர்ப்பளிக்கிறது. அனாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளையும் இறந்தவருடைய சொத்தில் அவர்களுக்குரிய பாகங்களையும் சரியாக கொடுக்க வேண்டுமென்றும்), அனாதைகளுக்கு (மஹ்ர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்த வேண்டும் (என்றும் அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi127. (நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகிறான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) ‘‘அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்தவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70