وَإِنِ ٱمْرَأَةٌ خَافَتْ مِنۢ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَٱلصُّلْحُ خَيْرٌ وَأُحْضِرَتِ ٱلْأَنفُسُ ٱلشُّحَّ وَإِن تُحْسِنُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். ஆன்மாக்கள் கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் நன்மை செய்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். (பெண்களின்) ஆன்மாக்கள் (தங்கள் கணவன் விஷயத்தில்) கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. இன்னும், நீங்கள் (உங்கள் மனைவிகளுக்கு) நன்மை செய்தால், (அவர்கள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் இம்மை மறுமை வாழ்க்கையின் நன்மைக்கு அதுதான் மிகச் சிறந்த வழியாகும்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi128. எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் (தனக்கு) கடுமையாக இடையூறளிப்பான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகிறது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு நன்மை செய்பவராக இருந்து அல்லாஹ்வுக்கும் பயந்து நடந்து கொண்டால் (அது மிக நல்லது.) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.