caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 155

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:155

إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوْا۟ مِنكُمْ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ ٱلشَّيْطَٰنُ بِبَعْضِ مَا كَسَبُوا۟ وَلَقَدْ عَفَا ٱللَّهُ عَنْهُمْ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரு கூட்டங்கள் (உஹுதில்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் திரும்பினார்களோ, (அவர்கள் நிராகரிப்பினால் திரும்பவில்லை.) ஷைத்தான்அவர்களை சறுகச் செய்ததெல்லாம் (தவறுகளில்) அவர்கள் செய்த சிலதின் காரணமாகத்தான். திட்டவட்டமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா சகிப்பாளன்.
Tamil Translation - Omar Sharifஇரு கூட்டங்கள் (உஹுதில்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் (போரிலிருந்து) விலகினார்களோ, (அவர்கள் நிராகரிப்பினால் விலகவில்லை. மாறாக) அவர்களை ஷைத்தான் சறுகச் செய்ததெல்லாம் அவர்கள் செய்த சில (தவறான) செயல்களின் காரணமாகத்தான். திட்டவட்டமாக அல்லாஹ் அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா சகிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi155. (நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க பொறுமையுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70