يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ كَفَرُوا۟ وَقَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ إِذَا ضَرَبُوا۟ فِى ٱلْأَرْضِ أَوْ كَانُوا۟ غُزًّى لَّوْ كَانُوا۟ عِندَنَا مَا مَاتُوا۟ وَمَا قُتِلُوا۟ لِيَجْعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسْرَةً فِى قُلُوبِهِمْ وَٱللَّهُ يُحْىِۦ وَيُمِيتُ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களைப் போன்று ஆகாதீர்கள். அவர்களுடைய சகோதரர்கள் பூமியில் பயணித்தால் அல்லது போர்புரிபவர்களாக இருந்தால் அவர்களுக்கு (அந்நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் மரணித்திருக்கவும் மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்." அவர்களுடைய உள்ளங்களில் இதை ஒரு கைசேதமாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). அல்லாஹ்தான் வாழவைக்கிறான்; மரணிக்க வைக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்களுடைய (முஃமினான) சகோதரர்கள் பூமியில் பயணித்தால் அல்லது போர்புரிபவர்களாக இருந்தால் அவர்களுக்கு (அந்நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: “அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் மரணித்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.’’ அவர்களுடைய உள்ளங்களில் இதை (-இந்த நம்பிக்கையை) ஒரு கைசேதமாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). அல்லாஹ்தான் வாழவைக்கிறான். இன்னும், மரணிக்க வைக்கிறான். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi156. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று (அந்நிராகரிப்பாளர்கள்) கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் தருகிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் வைப்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்குகிறான்.