caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 154

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:154

ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّنۢ بَعْدِ ٱلْغَمِّ أَمَنَةً نُّعَاسًا يَغْشَىٰ طَآئِفَةً مِّنكُمْ وَطَآئِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ ظَنَّ ٱلْجَٰهِلِيَّةِ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلْأَمْرِ مِن شَىْءٍ قُلْ إِنَّ ٱلْأَمْرَ كُلَّهُۥ لِلَّهِ يُخْفُونَ فِىٓ أَنفُسِهِم مَّا لَا يُبْدُونَ لَكَ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هَٰهُنَا قُل لَّوْ كُنتُمْ فِى بُيُوتِكُمْ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ ٱلْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِىَ ٱللَّهُ مَا فِى صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِى قُلُوبِكُمْ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, துயரத்திற்குப் பின்னர் உங்கள் மீது சிறு நித்திரையை மன நிம்மதிக்காக இறக்கினான். உங்களில் ஒரு வகுப்பாரை அது சூழ்ந்தது. (வேறு) ஒரு வகுப்பாரோ, அவர்களுக்கு தங்கள் ஆன்மாக்கள் கவலையைத் தந்தன. (இணை வைப்பவர்களின்) மடத்தனமான எண்ணத்தைப் போன்று அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை எண்ணுகின்றனர். "நமக்கு அதிகாரத்தில் ஏதும் உண்டா?" என்று கூறுகின்றனர். (நபியே) கூறுவீராக; "நிச்சயமாக எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குரியதே!'' உமக்கு வெளிப்படுத்தாதவற்றை தங்களுக்குள் மறைக்கின்றனர். "அதிகாரத்தில் ஏதும் நமக்கு இருந்திருந்தால், இங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டோம்" எனக் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் எவர்கள் மீது கொலை விதிக்கப்பட்டதோ அவர்கள் தாங்கள் கொல்லப்படும் இடங்களின் பக்கம் வெளியாகியே தீருவார்கள்." (நம்பிக்கையாளர்களே) அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றைப் பரிசோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு செய்தான்). நெஞ்சங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்.
Tamil Translation - Omar Sharifபிறகு, துயரத்திற்குப் பின்னர் உங்கள் மீது சிறு நித்திரையை மன நிம்மதிக்காக இறக்கினான். உங்களில் ஒரு வகுப்பாரை அது சூழ்ந்தது. (வேறு) ஒரு வகுப்பாரோ, அவர்களுக்கு அவர்களது ஆன்மாக்கள் அதிக கவலையைத் தந்தன. (இணைவைப்பவர்களின்) மடத்தனமான எண்ணத்தைப் போன்று அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை எண்ணுகிறார்கள். “நமக்கு அதிகாரத்தில் ஏதும் உண்டா?’’ என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக: “நிச்சயமாக எல்லா அதிகாரமும் அல்லாஹ்விற்குரியதே.’’ உமக்கு வெளிப்படுத்தாதவற்றை அவர்கள் தங்களுக்குள் மறைக்கிறார்கள். “அதிகாரத்தில் ஏதும் நமக்கு இருந்திருந்தால், இங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் எவர்கள் மீது (போரில்) கொல்லப்படுவது விதிக்கப்பட்டுவிட்டதோ அவர்கள் தாங்கள் கொல்லப்படும் இடங்களை நோக்கி வெளியாகி வந்தே தீருவார்கள்.’’ (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றைப் பரிசோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு செய்தான்). இன்னும், நெஞ்சங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi154. (நம்பிக்கையாளர்களே!) இத் துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கிவைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவற்றை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து ‘‘நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?'' என்று கேட்டனர். (இதற்கு,) ‘‘எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!'' என்று (நபியே! பதில்) கூறுவீராக. (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு ‘‘நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்படவேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்'' என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுவீராக. உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70