caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 40

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:40

أَوْ كَظُلُمَٰتٍ فِى بَحْرٍ لُّجِّىٍّ يَغْشَىٰهُ مَوْجٌ مِّن فَوْقِهِۦ مَوْجٌ مِّن فَوْقِهِۦ سَحَابٌ ظُلُمَٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَآ أَخْرَجَ يَدَهُۥ لَمْ يَكَدْ يَرَىٰهَا وَمَن لَّمْ يَجْعَلِ ٱللَّهُ لَهُۥ نُورًا فَمَا لَهُۥ مِن نُّورٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது ஆழமான கடலில் உள்ள இருள்களைப் போலாகும் (அவர்களது செயல்கள்). அதை (-அந்த கடலை) அலைக்கு மேல் அலை சூழ்ந்திருக்க, அதற்கு மேல் மேகம் சூழ்ந்திருக்கிறது. (இப்படி) இருள்கள் -அவற்றில் சில, சிலவற்றுக்கு- மேலாக (-கடுமையாக) இருக்கிறது. அவன் தனது கையை வெளியே நீட்டினால் அதை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை (நேர்வழியை) ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எவ்வித ஒளியும் (-நேர்வழியும்) இல்லை.
Tamil Translation - Omar Sharifஅல்லது, ஆழமான கடலில் உள்ள இருள்களைப் போலாகும் (அவர்களது செயல்கள்). அதை (-அந்த கடலை) அலைக்கு மேல் அலை சூழ்ந்திருக்க, அதற்கு மேல் மேகம் சூழ்ந்திருக்கிறது. (இப்படி) இருள்கள் -அவற்றில் சில, சிலவற்றுக்கு- மேலாக (-கடுமையாக) இருக்கிறது. அவன் தனது கையை வெளியே நீட்டினால் அதை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு (நேர்வழி எனும்) ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எவ்வித ஒளியும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi40. அல்லது (அவர்களுடைய செயல்) கடலின் ஆழத்திலுள்ள இருளுக்கு ஒப்பாக இருக்கிறது. அதை அலைக்கு மேல் அலைகள் மூடிக் கொண்டிருப்பதுடன் மேகங்களும் (கவிழ்ந்து) மூடிக்கொண்டிருக்கின்றன. அன்றி, அவன் தன் கையை நீட்டிய போதிலும் அதைக் காண முடியாத அளவுக்கு இருள்களும் ஒன்றன்மேல் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும்) ஒரு பிரகாசமும் கிட்டாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70