وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَعْمَٰلُهُمْ كَسَرَابٍۭ بِقِيعَةٍ يَحْسَبُهُ ٱلظَّمْـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمْ يَجِدْهُ شَيْـًٔا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்கள் அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். அதை தாகித்தவர் தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை ஏதும் காணமாட்டார். அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். அவன் அவருடைய கணக்கை அவருக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான். கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பாளர்கள் - அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். (தாகித்தவர்) அதை தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை அறவே (அங்கு) காணமாட்டார். இன்னும், அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். ஆக, அவன் அவருடைய கணக்கை அவருக்கு முழுமையாக நிறைவேற்றுவான். இன்னும், கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர்களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கிறான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.