أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلطَّيْرُ صَٰٓفَّٰتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ்வை வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அவனை துதிக்கின்றனர். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ் - வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அவனை துதிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவையும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீர் காணவில்லையா? இவை அனைத்தும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.