وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍ تَعْرِفُ فِى وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِٱلَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ ءَايَٰتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكُمُ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَبِئْسَ ٱلْمَصِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்களுடைய முகங்களில் (நீங்கள்) விரும்பாததை (-முக சுளிப்பை) நீர் பார்ப்பீர்! நமது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுபவர்களை கடுமையாகப் பிடித்து விடுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! “இவர்களைவிட வெறுப்பானதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” (அதுதான்) நரகம். நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ் அதை வாக்களித்துள்ளான். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்களுடைய முகங்களில் வெறுப்பை (-முக சுளிப்பை) நீர் பார்ப்பீர்! நமது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுபவர்களை கடுமையாகப் பிடித்து (கொன்று) விடுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “(சத்தியம் இன்னும் அதன் பக்கம் அழைக்கிற) இவர்களைவிட (அவர்களுக்கு) வெறுப்பானதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” அதுதான் நரகமாகும். நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ் அதை வாக்களித்துள்ளான். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. அவர்கள் மீது தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதை நிராகரிக்கும் இவர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் காண்பீர். நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பவர்கள் மீது இவர்கள் பாய்ந்து விடுவார்கள் போலும்! (ஆகவே, இவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! நான் உங்களுக்கு இதைவிட கொடியதொரு விஷயத்தை அறிவிக்கவா? (அது நரக) நெருப்புதான். அதையே (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்து இருக்கிறான். (அது) சேருமிடங்களிலெல்லாம் மிகக் கெட்டது.