وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَٰنًا وَمَا لَيْسَ لَهُم بِهِۦ عِلْمٌ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதையும் அவர்களுக்கு எதைப் பற்றி அறவே (எவ்வித) அறிவும் இல்லையோ அதையும்தான் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்யாரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் எதற்கு எந்த ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதையும்; இன்னும், அவர்களுக்கு எதைப் பற்றி அறவே எவ்வித அறிவும் இல்லையோ அதையும் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகிறார்கள். (விசாரணை நாளில்) அநியாயக்காரர்களுக்கு உதவுபவர் யாரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi71. (நபியே! நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவர்களிடம் (அல்லாஹ்) அத்தாட்சி எதையும் இறக்கவில்லை; அவர்களிடம் அது பற்றி கல்வியும் இல்லை. இந்த அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்.