caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 73

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:73

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٌ فَٱسْتَمِعُوا۟ لَهُۥٓ إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخْلُقُوا۟ ذُبَابًا وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥ وَإِن يَسْلُبْهُمُ ٱلذُّبَابُ شَيْـًٔا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلْمَطْلُوبُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களே! ஓர் உதாரணம் (உங்களுக்கு) விவரிக்கப்படுகிறது. அதை செவிமடுத்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்றவை (-வணங்குகின்றவை) ஒரு ஈயையும் அறவே படைக்க மாட்டார்கள், அவர்கள் அதற்கு ஒன்று சேர்ந்தாலும் சரி. அவர்களிடமிருந்து ஈ எதையும் பறித்தாலும் அதை அதனிடமிருந்து அவர்கள் பாதுகாக்க மாட்டார்கள். தேடக்கூடியதும் (-அவர்களுடைய கடவுள்களும்) தேடப்படுவதும் (-ஈயும்) பலவீனமானவர்களே!
Tamil Translation - Omar Sharifமக்களே! ஓர் உதாரணம் (உங்களுக்கு) விவரிக்கப்படுகிறது. ஆக, அதை செவிமடுத்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை ஓர் ஈயையும் அறவே படைக்க மாட்டார்கள், அவர்கள் (எல்லோரும்) அதற்கு ஒன்று சேர்ந்தாலும் சரி. இன்னும், அவர்களிடமிருந்து அந்த ஈ எதையும் பறித்தாலும் அதை அதனிடமிருந்து அவர்கள் பாதுகாத்து பிடுங்கவும் மாட்டார்கள். (அவர்களின்) கடவுள்களும் (அவற்றால்) தேடப்படுகின்றதும் (-ஈயும்) பலவீனமானவர்களே!
Tamil Translation - Abdulhamid Baqawi73. மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதைசெவிதாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்கள் என) அழைக்கிறீர்களோ அவை அனைத்தும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஈ ஒன்று அவற்றினுடைய ஒரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (அவர்கள் தெய்வங்கள் என) அழைக்கும் அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்கள் என) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70