caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 90

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:90

بِئْسَمَا ٱشْتَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغْيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضْلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ مُّهِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளில் இருந்து இறக்குவதைப் பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நிராகரித்து அவர்கள் தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டது. (தவ்றாத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்தார்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரக்கூடிய வேதனையுண்டு.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளை இறக்குவதைப் பற்றி பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை அவர்கள் நிராகரித்து, தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டதாக இருக்கிறது. (தவ்ராத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்திற்குரியவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும், (முஹம்மத் நபியை) நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரக்கூடிய தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi90. (இந்த குர்ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன் அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன் அருளை இறக்கி வைத்ததைப்பற்றி பொறாமைகொண்டு, அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தையே நிராகரிப்பதன் மூலமாக அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்து விட்டார்கள். ஆதலால், (அந்)நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70