caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 91

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:91

وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ نُؤْمِنُ بِمَآ أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறுகிறார்கள். அதற்கு அப்பால் உள்ளதை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே) கூறுவீராக: “(உங்கள் வேதத்தை உண்மையாகவே நம்பிய) நம்பிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?
Tamil Translation - Omar Sharifஇன்னும், “அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” எனக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னால் இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்ராத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே!) கூறுவீராக: “(உங்கள் வேதத்தை உண்மையாகவே) நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?”
Tamil Translation - Abdulhamid Baqawi91. ‘‘அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால் ‘‘எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவற்றை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்'' எனக் கூறி அவற்றைத் தவிர உள்ள இ(ந்)த(க் குர்ஆ)னை நிராகரித்து விடுகிறார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! அவர்களை நோக்கிக்) கேட்பீராக: ‘‘(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70